பதிவு செய்த நாள்
20
ஜூன்
2017
12:06
காஞ்சிபுரம் : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய, பாத யாத்திரையாக சென்ற, பாதிரி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், காஞ்சிபுரம் வந்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, பாதிரி கிராமத்தைச் சேர்ந்த, ராதா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால் சுவாமி பக்த சமாஜம், ஸ்ரீதேவதேவி சமேத, தொண்டடி பொடி ஆழ்வார் சபை உள்ளது. இந்த சபையைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும், பாதிரி கிராமத்தில் இருந்து, திருப்பதிக்கு புனித பாத யாத்திரையாக செல்வது வழக்கம். அந்த வகையில், 14வது ஆண்டாக, கடந்த, 16ல், 24 பேர் பாத யாத்திரையாக புறப்பட்டனர். திருப்பதி வெங்கடேச பெருமாளை, வாகனத்தில், சாத்துபடி செய்து, காஞ்சிபுரம் வந்த அவர்கள், அரக்கோணம் வழியாக திருப்பதிக்கு செல்கின்றனர். ”கடந்த வெள்ளியன்று அதிகாலை, 5:00 மணிக்கு, பாத யாத்திரையாக புறப்பட்ட நாங்கள், இன்றிரவு, திருமலைக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என, இக்குழுவைச் சேர்ந்த, கே.உபதேசன் தெரிவித்தார்.