ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கப் போவதாக வைத்துக் கொள்ளுங்கள். ’பையன் நல்லவன் தானா? தொழுகையை சரியாக கடைபிடிப்பவனா? படித்தவன் என்றாலும் படித்தவன் போல் நடந்து கொள்கிறானா? படிக்காவிட்டாலும் நல்ல குணம் உடையவனா? கெட்ட பழக்கங்கள் கொண்டவனா?’ என்றெல்லாம் விசாரிப்பது வழக்கம்.இந்த விஷயத்தில் பையனைப் பற்றி விசாரிக்கும் முன் அவனது நண்பனைப் பற்றியும் விசாரியுங்கள் என்கிறார் நபிகள் நாயகம். ஏனெனில், நண்பன் குடிகாரனாக இருந்தால், உடன் சேர்ந்தவனையும் கெடுத்து விடுவான். “ஒரு மனிதனைப் பற்றி விசாரிக்காதீர்.அவனுடைய நண்பனை தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஒவ்வொருவனும் தனதுநண்பனைத் தான் பின்பற்றுவான்,” என்பது நாயகத்தின் அறிவுரை.
இன்று நோன்பு திறக்கும் நேரம் : மாலை 6:47 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம் : அதிகாலை 4:16 மணி.