குன்னுார் : குன்னுாரில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நிறைவு பெற்றது. குன்னுார் புனித அந்தோணியார் தேவாலயம் நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. இதன் நடப்பாண்டின் திருவிழா கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாளான நேற்று முன்தினம் பங்கு திருவிழா நடந்தது. விழாவையொட்டி காலை, 10:00 மணி முதல், 11:00 வரை திருப்பலி நடந்தது. தொடர்ந்து நடந்த அன்பின் விருந்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்பு மாலையில் வண்ண விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், அந்தோணியார் பவனி நடந்தது. இதில், ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டு, உப்பு வீசி தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். தேர் முக்கிய வீதிகள் வழியாக தேவாலயத்தை அடைந்தது.