பூஜை செய்வதற்கு முன் சில ஏற்பாடுகளைச் செய்வோம் இல்லையா! அதை முறைப்படி செய்ய இதைப் படியுங்க! *சுவாமியின் இடதுபுறம் சாம்பிராணி காட்டும் தூபக்கரண்டியையும், வலதுபுறம் கற்பூரத்தட்டையும் வைக்கவும். *இடதுபுறம் பழங்களையும், வலதுபுறம் பலகாரங்களையும் வையுங்கள். *தீர்த்தம் பருகிய பிறகு, மீதமுள்ளதை மறுநாள் காலையில் செடிகள், மரங்களில் கொட்டுங்கள். பூந்தொட்டி இருந்தால் அதில் விடலாம். தரையில் ஊற்றக்கூடாது. *படங்களையும், பூஜைக்குரிய மேஜையையும் வாரம் ஒருமுறை துடையுங்கள். விளக்கை தினமும் தேய்த்தால் நல்லது. பெரிய விளக்காக இருந் தால், வாரம் இருமுறையாவது சுத்தம் செய்யுங்கள். *வெறுமனே தீபதூபம் காட்டுவதை விட, கடவுளைக் குறித்த நாமங்கள், பாடல்கள், ஸ்லோகங்களை உச்சரித்தபடியே காட்டுவதே உயர்ந்தது. *பூஜை நேரத்தில், குடும்பத்தினர் எல்லாரும் பத்துநிமிடமாவது செலவழிக்க வேண்டும். கூட்டாக பாடல்களைப் பாடுவது, ஸ்லோகங்களைச் சொல்வது அதிக பலனைத் தரும்.