சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்கிறது அப்பர் தேவாரம். தரிசனத்திற்கு செல்லும் போது அபிஷேகத்திற்கு நீரும், அர்ச்சனைக்கு பூவும், தீபராதனைக்கு சாம்பிராணியும் எடுத்துச் செல்ல வேண்டும். நமக்கு இறைவன் தந்ததை அவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்பதே இதற்கு காரணம். இதையே தத்துவரீதியாகவும் சொல்வர். மனம் என்னும் மலரையும், அன்பு என்னும் அபிஷேக நீரையும், மனத்தூய்மை என்னும் தூபத்தையும் வழிபாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்.