வாலாஜாபேட்டை: உலக யோகா தினத்தை முன்னிட்டும், ஆனி கிருஷ்ண பட்ச த்வாதிசி திதி கூர்ம ஜெயந்தியை முன்னிட்டும், வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று கூர்ம ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி, கூர்ம பெருமாளுடன் லஷ்மி நரசிம்மருக்கு சிறப்பு அபி?ஷகம், சிறப்பு ஆராதனை நடந்தது. இதில், உலக மக்கள் அனைவரும் யோகா கலையை கடைபிடித்து, ஆரோக்கியத்துடன் வாழ கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.