வாழ்வில் துன்பம் குறைய எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2017 05:06
துன்பம் அனைத்தும் அடியோடு நீங்கி, நிம்மதியுடன் வாழ லட்சுமி நரசிம்மர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மாலையில் 4.30 - 6.00 மணிக்குள் வழிபாடு செய்வது சிறப்பு. லட்சுமி நரசிம்மர் படத்தை கிழக்கு முகமாக வைத்து, விளக்கேற்றி காய்ச்சிய பால் அல்லது பானகம் பிரசாதமாக படைத்து, லட்சுமி நரசிம்மம்சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை 108 முறை பக்தியுடன் ஜெபியுங்கள். குறைந்த பட்சம் 48 நாள் இதை மேற்கொள்வது நல்லது. விரைவில் துன்பம் விலகுவதை கண் கூடாக உணர்வீர்கள்.