Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள் -28: பெருமைக்குரிய ... சதுரகிரி உண்டியல் திறப்பு: ரூ.14 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
’தன்வந்திரி பீடத்தில் 1,000 சண்டி யாகம் : 70 சிவாச்சாரியார்கள் நடத்துகின்றனர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2017
12:06

வேலுார்: ”தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், 1,000 சண்டி யாகத்தை, 70 சிவாச்சாரியார்கள் நடத்துகின்றனர்,” என, முரளிதர சாமிகள் கூறினார்.
இது குறித்து அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டையில், தன்வந்திரி ஆரோக்கிய பீடம் உள்ளது.
இங்கு சகல ஐஸ்வர்யம் தரும் ஸஹஸ்ர சண்டியாகம், ஜூலை, 23 முதல், 30 வரை, எட்டு நாட்கள் 1,000 முறை நடக்கிறது. ஸ்ரீவித்யா உபாசகர் ஸ்ரீபுரம் ராமகிருஷ்ண சர்மா தலைமையில் சென்னை, சிதம்பரம், திருப்பதி, பூனா, ராமேஸ்வரம், திருச்செந்துார், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, மும்பை ஆகிய இடங்களில் இருந்து, 70 சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்துகின்றனர். இதையொட்டி தினமும், 27 ேஹாமம் நடக்கிறது. 700 ஸ்லோகம், 13 அத்தியாயங்களுடன், 1,000 முறை தினமும் பாராயணம் நடக்கிறது.

இதற்காக ஜூலை, 23 காலை, 7:00 மணிக்கு கோ பூஜை, கணபதி ேஹாமத்துடன் யாகம் தொடங்குகிறது. கணபதி யாகம், நவக்கிரக ேஹாமம், மஹாலஷ்மி யாகம், தன்வந்திரி யாகம், யோகினி பைரவர் பலி பூஜைகள், ருத்த ஜபம், லலிதா சகஸ்ர நாம பாராயணம், துர்காஷ்டமி தேவி மஹாத்மியம் பாராயணம், ஸ்ரீவித்யா ேஹாமம், நவாவரண பூஜை என தொடர்ந்து நடக்கிறது. உலக நன்மைக்காகவும், இயற்கை வளத்திற்காகவும் சண்டியாகம் நடக்கிறது. மேலும் மண் வளம், மழை வளம், இயற்கை நலன், விவசாயிகளின் நலம், ஆரோக்கியத்திற்காக கோமாதாவுக்கும், காளை மாட்டுக்கும் திருமண விழா, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஜூலை, 21 காலை, 9:15 மணி முதல், 10:15 க்குள் நடக்கிறது. மனிதர்களுக்கு திருமணம் நடப்பதை போலவே, திருமண பத்திரிக்கை அச்சடித்து இந்த திருமணம் மூன்று நாட்கள் நடக்கிறது. ஜூலை, 9ல், தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு கோடி தீபத்துடன், ஒரு கோடி அர்ச்சனை ஆரம்பமாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar