Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் ... பரமக்குடியில் மழை வேண்டி பிரார்த்தனை பரமக்குடியில் மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் பாதுகாப்பு என்.எஸ்.ஜி., அதிகாரி ஆய்வு
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் பாதுகாப்பு என்.எஸ்.ஜி., அதிகாரி ஆய்வு

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2017
01:06

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு படை எஸ்.பி., ஆய்வு செய்து, அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார். ராமேஸ்வரம் கோயில் மற்றும் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதால், கோயில் சார்ந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி 2013ம் ஆண்டு முதல் கோயில் நான்கு ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்து, பக்தர்களை வெடிகுண்டு பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே கோயிலுக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

மேலும் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை, கோயில் ரதவீதி, கோயில் பிரகாரங்கள், சுவாமி, அம்மன் சன்னதி உள்ளிட்ட முக்கிய பகுதியில் 72 சி.சி.டி.வி., கேமிராக்கள் பொருத்தி, தமிழக சிறப்பு படை போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோயில் பாதுகாப்பு குறித்து நேற்று, தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.,) எஸ்.பி., பீனு ராஜசேகர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு கோயில் மூன்றாம் பிரகாரம், சுவாமி, அம்மன் சன்னதி மற்றும் கோயில் மேல் தளம் சென்று ஆய்வு செய்தனர். பின் கோயில் வரைபடம், சி.சி.டி.வி., கேமிராக்கள் செயல்பாடு குறித்து கோயில் பொறியாளர் ராமமூர்த்தியிடம் ஆலோசித்தனர். இதன் பின் கோயில், பக்தர்களின் பாதுகாப்பு குறித்து கோயில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, மத்திய, மாநில உளவுதுறை போலீசாருடன் ஆலோசனை நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar