சேர்விளாகம் முத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2017 01:06
செஞ்சி: சேர்விளாகம் முத்து மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா, சேர்விளாகம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன், வரசித்தி வினாயகர், நவக்கிரகங்களுக்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜையும், 10:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 10:15 மணிக்கு முத்து மாரியம்மன், வரசக்தி விநாயகர், நவகிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.