பதிவு செய்த நாள்
01
ஜூலை
2017
12:07
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன், நாளை துவங்குகிறது. திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது, பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், யோக நரசிம்மர், மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் தெள்ளிய சிங்கர், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை புரிகிறார். இத்தலத்தில், ஆண்டு தோறும், நரசிம்மசுவாமி பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், ஜூலை, 3ல், துவஜாரோஹணம் எனும் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 5ல், கருடசேவை உற்சவமும்; 9ல், தேர் திருவிழாவும் நடக்கிறது. 12ம் தேதி, கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.