பதிவு செய்த நாள்
01
ஜூலை
2017
01:07
கடலூர்: கடலூர் வண்ணாரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடலூர் வண்ணாரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 29ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி, முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, மூலஸ்தான கோபுரம், ராஜகோபுரம் கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம், மதியம் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனர்.