திருவாடானை, திருவாடானை அருகே செலுகை கிராமத்தில் உள்ள பெத்தநாச்சியம்மன் கோயில் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் கோயில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனை நடந்தது. வாணவேடிக்கையுடன் அம்மன் வீதி உலாவும், இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.