காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் சுதர்ஸன ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2017 11:07
காரைக்கால்: காரைக்காலில் நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் அவதாரநாளை முன்னிட்டு மஹா சுதர்ஸன ஹோமம் நடைபெற்றது. காரைக்கால் பாரதியார்சாலையில் உள்ள நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் பக்தஜன சபை சார்பில் நேற்று ஸ்ரீசுதர்சன ஜெயந்தி ஸ்ரீமஹ சுதர்சன ஹோமம் நடைபெற்றது.ஸர்வஸக்தனான ஸ்ரீமந் நாராயணன் தான் நினைத்தவாறே எதையும் செய்யும் ஆற்றல் பெற்றவன்.திருச்சக்ரத்தைக் கையிலேந்தியிருப்பதுதான் இதற்குக் காரணம்.சக்கரத்தாழ்வார் பகவானின் அவதாரமான நாளை முன்னிட்டு நேற்று சஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மஹா சுதர்ஸன ஹோமம்,திருமஞ்சனம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,தனி அதிகாரி ஆசைதம்பி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.