பதிவு செய்த நாள்
04
ஜூலை
2017
12:07
போடி: போடி ஸ்ரீமது கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே லிங்க வடிவில் அமைந்துள்ளது, ஸ்ரீ மது கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில். இங்கு வளர்ந்துள்ள கொன்றை மரம் தலவிருட்சமாகும். தேவாங்கர் குலம், அகஸ்த்திய மகரிஷி கோத்திரம், லொத்தேகார் வம்சம், சிக்குவீரம்மாள், வீரம்மாள் தாயம்மாள், தொடாக்கம்மாள், வேடன் வேடத்தி தாயாதிகளுக்கு பாத்தியப்பட்டதாகும். 1950 ம் ஆண்டிலிருந்து 67 ஆண்டுகளுக்கும் மேலாக கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகம்: இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, மூன்று நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்பாபிஷேக யாக குண்டல ஹோமம் நடைபெற்றது. நேற்று காலை 10:00 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. விழாவில் கோயில் தாயாதிகள், சம்பந்தகாரர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழு தலைவர் ரமேஷ், செயலாளர் சண்முகநாதன், பொருளாளர் பாஸ்கரன், உபதலைவர் அசோக்குமார், உப செயலாளர் காந்தி மற்றும் நிர்வாகஸ்தர்கள், மகளிர் அணி தலைவர் மகேஸ்வரி, செயலாளர் கஸ்துாரி, செயலாளர் கமலவேணி, பொருளாளர் ரேணுகா, நிர்வாகஸ்தர்கள் செய்திருந்தனர். விழாவில் தாய் ஸ்தல தேவாங்கர் ஜாதி பொதுமையின் தலைவர் பரமேஸ்வரன், சவுடாம்பிகா பள்ளி தலைவர் கமலநாதன், தலைமையாசிரியர் காமேஸ்வரன், பாலாஜி மருத்துவமனை டாக்டர் மனோகரன், துரை பல்மருத்துவமனை டாக்டர் சண்முகப்ரீத்தி, ஓம் சிவாத்திரி சிற்ப நிலைய உரிமையாளர் மகேஸ்வரன், மாரி சுவீட்ஸ் உரிமையாளர் ஹரிஹரன், ஜி அக்ரோ டிரேடர்ஸ் உரிமையாளர்கள் ரமேஷ், அமர்நாத், பாலாஜி பவன் ஓட்டல் உரிமையாளர் ஜோதிகிரி, விநாயகா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் பாண்டியராஜ், ஜி.கே.பொன்னையா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் செந்தில்குமார், ராயல் ரெப்ரிஜிஸ்ரேசன் உரிமையாளர் கணேசன், வைரம் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் சேகர், ஏ.எம்.கார்மெண்ட் உரிமையாளர் முருகன், ஆலய ஸ்பதி ஐய்யப்பன், ஓவியர் ராசிமணி, மேலத்தெரு தேவாங்கர் ஜாதி பொதுமை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.