சங்கரன்கோவில் வெள்ளிப்பல்லக்கு மாயம்: இணைஆணையர் நேரில் விசாரணை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2017 01:07
திருநெல்வேலி: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் வெள்ளிப்பல்லக்கு காணாமல் போனது குறித்து அறநிலையத்துறை இணைஆணையர் நேரில் விசாரணை நடத்தினார்.திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் , சங்கரநாராயணசுவாமி கோயில் பிரசித்திபெற்றது.சைவமும், வைணவமும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையிலான கோயிலாகும். இங்கு சுவாமியை அர்த்தஜாம பூஜைக்கு கொண்டுசெல்ல பயன்படும் வெள்ளிப்பல்லக்கினை காணவில்லை என திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 30 கிலோ எடையுடன் கூடிய வெள்ளிப்பல்லக்கு காணாமல் போனது குறித்து பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. கோயில் துணைஆணையர் பொன்சுவாமிநாதன் இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி நேற்று சங்கரன்கோவிலில் நேற்று நேரடியாக விசாரணை நடத்தினார். அங்குள்ள அனைத்து ரகசிய அறைகளிலும் நேரில் ஆய்வு செய்தார். கோயிலில் வைக்கப்பட்டுள்ள கேமராக்களின் பதிவுகளை கொண்டு விசாரணை நடக்கிறது.