பதிவு செய்த நாள்
06
ஜூலை
2017 
11:07
 
 பண்ணைக்காடு: பண்ணைக்காடு சுப்ரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. யாகசாலை பூஜையில் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கி தீர்த்தம் அழைத்தல், மகாசங்கல்பம், வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், பிரவேசபலி, சுவாமி திருக்குடத்திற்குள் எழுந்தருளல், சந்நவதி, பூர்ணாகுதி, வேதபாராயணம், பேரொளி வழிபாடு, மருந்து சாத்துதல், பிம்பசுத்தி, நாடி சந்தானம், கனி மூலிகை வேள்வி உள்பட நான்கு கால பூஜையுடன் சுப்ரமணியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிவாச்சாரியர்கள் கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் கும்பாபிஷேக விழாவில் திரளாக கலந்து வழிபட்டனர். மகாதீபாராதனையை தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை பக்தர்கள் வழிபாடு செய்தனர். முன்னதாக மலேசியா பத்துமலை முருகன் சிலை பிரதிருஷ்டை செய்யப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.