Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு ... ஆளைப் பார்த்து எடை போடாதீர் ஆளைப் பார்த்து எடை போடாதீர்
முதல் பக்கம் » துளிகள்
8 வித சக்திகளாக ஆராதிக்கப்படும் மதுரை மீனாட்சி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
8 வித சக்திகளாக ஆராதிக்கப்படும் மதுரை மீனாட்சி!

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2017
02:07

மதுரையில் மீனாக்ஷி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப் படுகிறாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.

திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி
ப்ராத சந்தியில் – பாலா
6 – 8 நாழிகை வரையில் – புவனேஸ்வரி
12 – 15 நாழிகை வரையில் – கௌரி
மத்யானத்தில் – சியாமளா
சாயரக்ஷையில் – மாதங்கி
அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி
பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி

அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும் போது, அவளுக்கு செய்யும் அலங்காரங்களும் மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்ப இருக்கிறது.  மாலை நேரத்தில் தங்க கவசம், வைரக்கிரீடம் போன்ற அலங்காரங்கள், காலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம், உச்சி காலத்தில் மடிசார் புடவை, இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்ற அலங்காரங்களுடன் அன்னையைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும் எனபது சத்தியம்

எல்லா கோவில்களும் போல இங்கும் பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரதி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது. அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது.

மதுரையில் பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத்திகட்டா காட்சி. பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்யத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம். மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரித்தல் நல்ல பயனைக் கொடுக்கும்.

பிள்ளை இல்லாதவர்கள் : காலையில் மீனாட்சியின் சிறுபிள்ளை அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் கட்டாயம் பலன் தருவாள் அன்னை என்கின்றனர்.

வியாபார நஷ்டம் :  தொழில் மற்றும் வேளையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரம் கண்டு முன்னேற்றம் பெறலாம்,  இதையெல்லாம் விட தாயை இந்த எல்லா அலங்காரத்திலும் நாம் காண என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் கெலகினஜுகனஹள்ளி கிராமத்தில் உள்ள தேவரபெட்டா ... மேலும்
 
temple news
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் காவிரி கரையோரத்தில் குஞ்சா (குண்டுமணி) லட்சுமி நரசிம்மர் ... மேலும்
 
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 
temple news
* உன்னுடைய கடமைகளை சரியாக செய். * பிறருடைய நன்மைக்காக பாடுபடும் போது மனம் துாய்மை பெறும்.  * மனதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar