Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ... தி.மலையில் கிரிவலம் வர உகந்த நேரம் தி.மலையில் கிரிவலம் வர உகந்த நேரம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி லட்டு, தரிசன டிக்கெட் விலை உயரும்?
எழுத்தின் அளவு:
திருப்பதி லட்டு, தரிசன டிக்கெட் விலை உயரும்?

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2017
10:07

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், 420 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், லட்டு பிரசாதம் மற்றும் தரிசன டிக்கெட் விலை உயர வாய்ப்புஉள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருப்பதி,லட்டு, தரிசன, டிக்கெட்,விலை,உயரும்?:  திருமலை, திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு பட்ஜெட், 2,500 கோடி ரூபாய்க்கும் மேல். ஒவ்வொரு ஆண்டும் வருவாய் உயர் வுக்கு தக்கபடி, தேவஸ்தானத்தின் பட்ஜெட் தொகையும் உயர்வடையும்.

உண்டியல்:  அதனால், தேவஸ்தானத்திற்கு இதுவரை எந்த நிலையிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டது இல்லை.இந்நிலையில், கடந்த ஆண்டு, மத்திய அரசு அறிவித்த பணமதிப்பு இழப்பு திட்டம் அமலான நாள் முதல், தேவஸ்தானத்திற்கு, வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால், முதல் முறையாக, தேவஸ்தான பட்ஜெட் பற்றாக்குறை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. உண்டியல் மூலம் தேவஸ்தானத்திற்கு மாதம், 100 கோடி ரூபாய் வசூலாகி வந்தது. தற்போது, 60 முதல், 70 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆறு மாதத்தில், உண்டியல் வருமானம் மூலம், 108 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால், இந்தாண்டு உண்டியல் வருமானம், 1,000 கோடி ரூபாயை தாண்டாது என, அதிகாரிகள் கணித்துஉள்ளனர். ஏழுமலையானுக்கு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை, தேவஸ்தானம், இணையதள ஏலம் மூலம் விற்று வருகிறது. அதன் மூலம், 2015ல், 200 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது; ஆனால் கடந்தாண்டு அது, 150 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

விரைவு தரிசனம்:  தேவஸ்தானம் இணையதள முன்பதிவில், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டை வெளியிட துவங்கியதிலிருந்து மாதந் தோறும், 23 ஆயிரம் பக்தர் கள், அந்த வசதியை பயன்படுத்தி, ஏழுமலை யானை தரிசித்து வந்தனர்.தற்போது, அந்த வசதி மூலம், தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை, 15 ஆயிரமாக குறைந்து உள்ளது. கோடை விடுமுறையின் போது, பரிந்துரை கடிதங் களுக்கு வழங்கும், பிரேக் தரிசனத்தை, தேவஸ் தானம் வார இறுதி நாட்களில் ரத்து செய்ததால், 12 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

லட்டு:  மானிய விலையில் லட்டு விற்பனை செய்வதால், ஆண்டிற்கு, 250 கோடி ரூபாய், தேவஸ்தானம் கூடுதலாக செலவிட்டு வருகிறது. ஒரு லட்டு தயாரிக்க, 35 ரூபாய் செலவாகிறது. ஆனால், 2005 முதல், லட்டு பிரசாதம் விலை, 25 ரூபாயாகவே உள்ளது. பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, இலவச லட்டு, தர்ம தரிசன பக்தர்களுக்கு, 10 ரூபாய் மானிய விலையில் இரண்டு லட்டு, தேவஸ்தான ஊழியர்களுக்கு தலா, ஐந்து ரூபாய் விலையில் மாதத்திற்கு, 10 லட்டு என, தேவஸ்தானம் அளித்து வருகிறது. இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு ஆண்டிற்கு, 250 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

விலை ஏற்றம்:  இவை அனைத்தையும் கணக்கிட்டால், தேவஸ்தானத்திற்கு, 420 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது பண மதிப்பு இழப்புடன், ஜி.எஸ்.டி., வரி விதிப் பும் இணைந்துள்ள தால், இந்தாண்டு தேவஸ் தானத்திற்கு கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது. அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு கட்ட, லட்டு பிரசாதம் மற்றும் தரிசன டிக்கெட், அறை வாடகை உள்ளிட்ட வற்றின் கட்டணத்தை உயர்த்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள், ஆந்திர அரசிற்கு கடிதம் எழுதி உள்ளனர்.

வருவாய் இழப்பை சரிக்கட்ட எத்தனையோ வழிகள் இருக்கு!:  திருப்பதி தேவஸ்தானத்தின் லட்டு, தரிசன டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற அறிவிப்பிற்கு, அதிருப்தி தெரிவித்துள்ள பக்தர்கள் கூறியதாவது: திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. பல ஆயிரம் கோடிக்கு, நகைகள் இருப்பு உள்ளன. வங்கியில், டிபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டி கிடைக்கிறது. எந்த காரணத்தை கருதி யும், பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு விலையை ஏற்றக்கூடாது; தரிசன கட்ட ணத்தை யும் உயர்த்தக் கூடாது. திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக செலுத் தப்பட்ட பழைய, 1,000 - 500 நோட்டுகளை, மத்திய அரசின் சிறப்பு அனுமதி மூலம், புதிய ரூபாயாக மாற்றி கொள்ள ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

ஜி.எஸ்.டி., தொடர்பான எந்த வரி யையும், திருப்பதி தேவஸ்தானத்திற்கு விதிக் கக் கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால், திருப்பதிக்கு ஏற்படும் வருவாய் இழப்பை நிச்சயம் சரி கட்ட முடியும். மேலும், திருப்பதி தேவஸ்தானம், இந்த விவகாரத்தை வருவாய் ஈட்டும் தொழிலாக பார்க்காமல், ஆன்மிக சேவையாகவே கருத வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஐப்பசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar