பதிவு செய்த நாள்
10
ஜூலை
2017
11:07
ஆர்.கே.பேட்டை: கிராமத்தின் நுழை வாயிலில் அமைந்துள்ள வழிகாட்டி விநாயகர் கோவில், கும்பாபிஷேகம், வரும் 16ம் தேதி காலை நடைபெற உள்ளது. புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆர் . கே. பேட்டை அடுத்த, வங்கனுார் கிராமத்தின் தெற்கு பகுதியில், பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது வழிகாட்டி விநாயகர் கோவில், கிராமத்திற்கு வருபவர்களும், கிராமத்தில் இருந்து வெளியூர் செல்பவர்களும், இந்த விநாயகரை வணங்கியே தங்களின் பயணத்தை மேற்கொள்வது வழக்கம். இதனாலேயே இவர் , வழிகாட்டி விநாயகர் என, அழைக்கப்படுகிறார். திருமணம் முடிந்து முதன் முதலாக, வங்கனுாருக்குள் வரும் புதுமண தம்பதியர், வழிகாட்டி விநாயகரை வணங்கிய பின்னரே, கிராமத்திற்குள் நுழைவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. சிறப்புமிக்க இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள், இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தன. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. வரும், 16ம் தேதி, காலை 9:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான யாகசாலை பூஜை, வ ரும் வ ெள்ளிக்கிழமை துவங்குகிறது. மேலும், கோவில் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேகத்திற்கு பக்தர்களிடம் இருந்து, நிதியுதவி எதிர்பார்க்கப்படுகிறது என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.