ராஜபாளையம் ஷீரடி சாய்பாபா கோயிலில் குருபூர்ணிமா பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2017 11:07
ராஜபாளையம்: ராஜபாளையம் முடங்கியார்ரோடு ஷீரடி சாய்பாபா கோயிலில் குருபூர்ணிமாவை முன்னிட்டு, காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 6:00 மணிக்கு ஆரத்தி, அகண்டபாராயணத்துடன் உற்சவ மூர்த்திக்கு பக்தர்கள் அபிேஷகம் செய்தனர். அதனை தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, வேதபாராயணம், மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. விஷ்ணு சகஸ்வரநாமம், பாராயணத்துடன் பகல் ஆரத்தி நடைபெற்றது. பூஜைகளுக்கு பின் நடந்த சிறப்பு அன்னதானத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை பஜனை, ஆரத்தி மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியுடன் பாபா பல்லக்கு உற்சவம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தன. விழா ஏற்பாடுகளை ஷீரடி சாயி சேவா சமிதி சங்கத்தினர் செய்திருந்தனர்.