பதிவு செய்த நாள்
11
ஜூலை
2017
12:07
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், தேர்பவனி நடந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், 44வது ஆண்டு திருத்தலப் பெருவிழா, கடந்த, 1 மாலை, 6:30 மணிக்கு, கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஏழு நாட்களும், காலை, 6:15 மணிக்கு திருப்பலியும், மாலை, 6:30 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடந்து வந்தது. நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, திருவிழா திருப்பலியும், உறுதிபூசுதல் மற்றும் புதுநன்மை அருட்சாதன விழா, தர்மபுரி ஆயர் லாரன்ஸ்பயஸ் தலைமையில் நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, தூய பாத்திமா அன்னை ஆலய தேர்பவனி இன்னிசை மற்றும் வாணவேடிக்கையுடன் நகர்வலம் வந்தது. தேருக்கு, பாலக்கோடு பங்கு தந்தை இருதயநாதன் மந்தரிப்பு செய்தார். இந்த தேர்பவனியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று, தேர்மீது உப்புகளை தூவி, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இன்று மாலை, 6:30 மணிக்கு திருப்பலியுடன் திருக்கொடி இறக்கி, திருவிழா நிறைவு பெறுகிறது.