பதிவு செய்த நாள்
11
ஜூலை
2017
12:07
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே, மழை வேண்டி, வருண பகவானுக்கு சிறப்பு பூஜை செய்து, கொடும்பாவியை பாடையில் கட்டி வீதியில் ஊர்வலமாக கொண்டு சென்று, ஏரிக்கரையில் எரித்து, நூதன வழிபாடு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த மேல்வில்லிவனம் கிராமத்தில், கடும் வறட்சியால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், மழை வேண்டி, நேற்று மாலை, 3:00 மணிக்கு அப்பகுதி மக்கள் ஒன்று கூடி, வருணபகவானுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின், கொடும்பாவியை எரித்து, அதை பாடையில் வைத்து, வீதியில் ஊர்வலமாக கொண்டு சென்று, ஏரிக்கரையில் எரித்து, நூதன வழிபாடு நடத்தினர். இதில், அந்த கிராமத்தைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.