சூலூர் : சூலூர் சுற்றுவட்டார சிவாலயங்களில் கால பைரவ ஜென்மாஷ்டமி விழா நடந்தது. வைத்தியநாத சுவாமி கோவில், சின்னியம்பாளையம் கணபதீஸ்வரர் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் மற்றும் குமரன் கோட்டம் சுவாமிநாதசாமி கோவிலில் கால பைரவரின் ஜென்மாஷ்டமியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. காலையில் விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. 64 பைரவ கலச ஸ்தாபனம், அக்னி கார்யம் நடந்தது.10 ஆயிரத்து எட்டு பைரவர் மூல மந்திர ஜபம் மற்றும் ஹோமம் நடந்தது. பின் மஹா தீபாராதனை நடந்தது. அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.