பதிவு செய்த நாள்
12
ஜூலை
2017
11:07
கம்பம்: கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் தேரோட்டம் நேற்று மாலை துவங்கியது. ‘கோவிந்தா... கோவிந்தா’ என்ற கோஷம் விண்ண திர ஆயிரக்கணக்கானபக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் ஆனித் தேரோட்டம் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெறுகிறது.
ஜூலை 3 ல் கொடியேற்றத்துடன் தேரோட்ட நிகழ்ச்சிகள் துவங்கின. முன்னதாக கம்பராயப் பெருமாளின் தங்கையான சாமாண்டியம்மன், அண்ணனுக்கு கொடிச்சேலை கொண்டு வந்து நாள் செய்தார். இதனை தேவாங்கர் சமுதாயத்தினர் செய்தனர். தொடர்ந்து விஸ்வகர்மா, தேவாங்கர், ஆயிர வைசியர், வாணியர்,யாதவர், குலாலர், வேளாளர், கவுடர்கள் மண்டகப்படி நடத்தினர். 8 ல் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தலைமை கர்ணம் வீட்டாரால் நடத்தப்பட்டது.
தேரோட்டம்: தேரோட்ட நாளான நேற்று அதிகாலை அதிகாலை 5:00 மணிக்கு கோயிலில் சிறப்பு பூஜைகள், , அபிேஷக , ஆராதனைகள் நடைபெற்றது. கம்பராயப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிறப்பு அலங்கா ரத்தில் தேரில் எழுந்தருளி னர். மதியம் 2:00 மணி முதல் ரதஉற்சவ கமிட்டியினர் அனைத்து சமூகத்தினரையும் தேரோட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். 4:15 மணிக்கு ஒக்கலிக கவுடர் சமுதாய நாட்டாண்மை காந்தவன் வெள்ளைக்குதிரையில் வந்தார். அவரை ரதஉற்சவ கமிட்டியினர் கொண்டித்தொழு வீதி அருகில் வரவேற்றனர். பின்னர் அவர் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு தேரில் ஏறினார். அவரை தொடர்ந்து பாரம்பரிய வழக்கப்படி 8 பேர் தேரில் ஏறினர். 4:50 மணிக்கு தேரில் இருந்தவர்கள் வெள்ளை வீச, தேரோட்டம் துவங்கியது. அப்போது சாரல் மழையும் பெய்யத்துவங்கியது. பக்தர்கள் எழுப்பிய ‘கோவிந்தா... கோவிந்தா’ என்ற கோஷம் விண்ணைத் தொட்டது. தேர் நிலையில் இருந்து கிளம்பி வ.உ.சி., திடலில் நிறுத்தப்பட்டது. இன்று பிற்பகல் அங்கிருந்து இழுக்கப்பட்டு பார்க் திடலில் நிறுத்தப்படும். நாளை நிலை வந்து சேரும். தேரோட்ட நிகழ்ச்சியில் தேனி எஸ்.பி., பாஸ்கரன், அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், செயல்அலுவலர் செந்தில்குமார் , அதிகாரிகள் பங்கேற்றனர். தேரோட்டத்தை காண கம்பம், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர்.
தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ரதஉற்சவ கமிட்டித் தலைவர் எஸ்.டி.டி. இளங்கோவன், செயலாளர் ஏ.கே.ஜனார்த்தனன், பொருளாளர் ஆர்.ஸ்ரீதரன், இணைத்தலைவர் பி.சுருளிவேல், துணைத் தலைவர் எம்.பி.ராமர், துணை செயலாளர்கள் வி.கிருஷ்ணசாமி, சி.ராஜா என்ற பாலசுப்ரமணியன், உறுப்பினர்கள் ஓ.ஆர்.நாராயணன், கே.ஆர்.ஜெயப்பாண்டியன், எம்.எஸ்.எஸ்.காந்தவாசன், சொக்கராஜா, மாரிக்கண்ணன், வி.ஆர்.விஜயபாஸ்கர், எம்.ஆர்.பார்த்திபன், வி.வேலுச்சாமி, எம்.துரைப்பாண்டியன், யூ.ராமசாமி, ஏ.செளந்தரராசன், பி.ராஜா, திருமலை சங்கர், கே.வி.பி.முருகேசன், எஸ்,மணிகன்டன், எஸ்,சுப்புராயர், டி.கே.எஸ்.மகுடபதி, வி.விஷ்ணுராம், மகு டபதி, வி.ராஜேந்திரன் கே.ஜெகதீசன் செய்திருந்தனர்.