பதிவு செய்த நாள்
12
ஜூலை
2017
11:07
திருப்பூர்: திருப்பூர், அன்னபூர்ணா லே- அவுட், வலம்புரி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா மற்றும் சங்காபிஷேக விழா, விமரிசையாக நடைபெற்றது. திருப்பூர், காந்தி நகர், அன்னபூர்ணா லே-அவுட், வலம்புரி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில், கும்பாபிஷேக, 3ம் ஆண்டு நிறைவு விழா, நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு, கலச ஸ்தாபனம், 108 சங்கு ஸ்தாபனம் மற்றும், 108 திரவியங்களுடன் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, மூலவருக்கு, பால், தயிர், பன்னீர், பழம் என பல்வேறு திரவியங்களில் அபிஷேகமும்; 108 சங்கு அபிஷேகமும் நடந்தது. வெள்ளி கவச அலங்காரத்தில், வலம்புரி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.