நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனிப்பிரமோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2017 05:07
சிவகாசி: திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் ஆனிப்பிரமோற்சவ விழா தேரோட்டம் நடந்தது. திருத்தங்கலில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நின்ற நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆனிப்பிரமோற்சவ திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப் படும்.
இந்த ஆண்டு ஜூலை 3ம் தேதி ஆனிப் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத் துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் விழா கோலம் பூண்டு இரவு நேரத்தில் பெரும õள், தயாருடன் ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முக்கிய விழாவான ஆனி தேரோட்டம் இன்று காலை 9 மணிக்கு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நின்ற நாராயணப் பெருமாள், செங்கமலத்தாயார் எழுந்தருளினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாலகங்காரதன், பாலகிருஷ்ணன் உட்பட இந்து அறநிலைத் துø ற அதிகாரிகள் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பின்னர் ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா, கோபாலா’ என கோஷ மிட்டவாறு தேரை இழுந்து சென்றனர். கீழ ரதவீதி வழியாக ரதவீதிகளில் தேர் உலா வந்து நிலைக்கு வந்தடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சிவகாசி டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.