பதிவு செய்த நாள்
13
ஜூலை
2017
11:07
திருப்பூர்: பெரிச்சிபாளையம் வீரமாத்தியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில், குதிøர மீது சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. திருப்பூர் பெரிச்சி பாளையத்தில், ஸ்ரீ வீரமாத்தியன் கோவில் உள்ளது. சிலம்பாத்தாள், பெத்தாயம்மன், கருப்பண சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்து வருகிறது. தாரõபுரம் தில்லாபுரி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. வெங்க கல்மேட்டில் இருந்து அரிசி அம்மை அழைத்து வந்து, சிலம்பாத்தாள் குட்டையில் அரிசி மாற்றப்பட்டது. நேற்று காலை, சிலம்பாத்தாள் திருக்கல்யாண உற்சவம், தீக்குளி பாயும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. இதில், மஞ்சள் பூவால் சுவாமி செய்யப்பட்டு, பச்சை குருத்தோலை, வாழை மட்டையில் அலங்காரம் செய்யப்பட்ட மணவறையில், திருக்கல்யாண உற்சவ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, குதிøர மீது எழுந்தருளிய சுவாமி, பம்பை மேளம், அதிர்வேட்டு முழங்க, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீடுகளில் உள்ள பெண்கள், சுவாமிக்கு ஆரத்தி எடுத்தும், நீர் ஊற்றியும் சுவாமியை வரவேற்றனர். ஏற்பாடுகளை வீரமாத்தியம்மன் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.