ஷீரடி: மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள, பிரசித்தி பெற்ற, சாய் பாபா கோவிலில், குரு பூர்ணிமா சிறப்பு பூஜையில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 7 - 10ம் தேதி வரை நடந்த மூன்று நாட்கள் நடந்த குரு பூர்ணிமா சிறப்பு வழிபாட்டில், உண்டியல் வசூலாக, 5.52 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது; இது, கடந்த ஆண்டை விட, 1.40 கோடி ரூபாய் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.