பாலமேடு, பாலமேடு அருகே வலையபட்டி ஊராட்சி லக்கம்பட்டி மந்தை முத்தாலம்மன் கோயில் விழா ஐந்து ஆண்டுகளுக்கு பின் இரண்டு நாட்கள் நடந்தது. முன்னதாக 15 நாட்களுக்கு முன் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்புக் கட்டினர். நேற்று முன் தினம் மாலை கிராமத்தினர் மறவபட்டி சென்று சாமி துாக்கி வந்தனர். இரவு கிராம எல்லையில் ஊர்வலமாக வந்து அம்மன் அருள்பாலித்தார். நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்தனர் சக்தி கிடா வெட்டியதையடுத்து கிராமத்தினர் கிடா வெட்டி அன்னதானம் வழங்கினர். நேற்று மாலை மஞ்சள் நீராடி அம்மன் பூஞ்சோலை கொண்டு சேர்த்தனர்.