கீழக்கரை, திருபுல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் ஜூன் 4 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. வருகிற ஜூலை 18 (செவ்வாய்கிழமை) அன்று 48வது நாளை முன்னிட்டு மண்டலாபிஷேகம் நடக்க உள்ளது. அன்று காலை 10:00மணியளவில் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம், விசேஷ திருமஞ்சனம், யாகசாலை பூஜை, தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.