காலம் முழுவதும் குடும்பத்துக்காக உழைத்து ஓய்வு பெற்று விட்டீர்கள். மகன் என்ன சொல்கிறான், “என்னத்த உழைச்சு கிழிச்சே இத்தனை நாளும்! ஒரு கார் உண்டா, பங்களா உண்டா? கிழிஞ்ச சட்டையை போட்டுகிட்டே திரியுறேன், என்கிறான். மனைவி அதற்கும் ஒருபடி மேலாகப் பேசுகிறாள். உறவினர்கள் “உன் ஓய்வுப் பணத்தில் எனக்கு கொஞ்சம் கடன் கொடு, என வந்து நிற்கிறார்கள். “இன்று முதல் உங்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம், என்று ஓய்வு பெற்ற ஒருவரிடம் எந்த குடும்ப உறுப்பினராவது சொன்னால், அவர் தான் உலகில் பாக்கியவான். அந்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கிறது? எனவே தான் நன்றி மறந்த இந்த மனித ஜென்மங்களுக்காக உழைப்பதை விட ஆண்டவனுக்காக உழைத்தால் நமக்கு பரலோக ராஜ்யத்திலாவது இடம் கிடைக்கும். “ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண்போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள், என்று ஒரு வசனம் இருக்கிறது.