குழந்தைகள் எங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அங்கே ஆண்டவர் இருக்கிறார். இயேசுநாதர் குழந்தைகளை மிகவும் நேசித்தார். நாமும் குழந்தைகளை நேசிக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல கதைகளை நகைச்சுவையோடு சொல்லிக் கொடுக்கும் போது அவர்கள் சிரித்து மகிழ்வார்கள். அந்த சிரிப்பில் மகிழும், ஆண்டவர் நம் வீட்டில் வந்து தங்குவார். அவர்களுக்கு நோய் இல்லாமல் பார்த்துக் கொள்வார். அவர்களை அணைத்துக் கொண்டு அவர்கள் மேல் கைவைத்து ஆசிர்வதிப்பார். குழந்தைகள் சேஷ்டை செய்தாலும், எரிந்து விழாமல், அன்பாகப் பேசி திருத்துங்கள்.