பழநி 2வது ரோப்கார் அமைக்க மலையில் நிபுணர்கள் களஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2017 06:07
பழநி: பழநி முருகன் மலைக் கோயிலில் இரண்டாவது ரோப்கார் அமைய உள்ள இடத்தில் சென்னை தனியார் நிறுவனப் பொறியாளர்கள், ரோப்கார் கமிட்டியினர் களஆய்வு செய்தனர்.
பழநி மலைக்கோயில் ரோப்கார் ஸ்டேஷன் அருகிலேயே இரண்டாம் ரோப்கார் நிறுவஇடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை வெளிநாட்டு நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்க தமிழக அரசு 11 பேர் கொண்ட ரோப்கார் கமிட்டியை அமைத்துள்ளது. இரண்டாவது ரோப்கார் அமைப்பதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டது. இதில் பிரான்சை சேர்ந்த போமா ரோப்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய ரோப்கார் கமிட்டி முடிவு செய்துள்ளது. அதன்படி பிரான்ஸ் நிறுவனத்தின் சார்பில், சென்னை தனியார் நிறுவன தலைமைப் பொறியாளர் வெங்கடாசலம் கொண்ட 5 பேர், பழநிகோயில் இணை ஆணையர் செல்வராஜ், திண்டுக்கல் உதவி பொறியாளர் நாச்சிமுத்து மற்றும் கோயில் பொறியாளர்கள் ஆகியோர் இடங்களை பார்வையிட்டனர். அதில் அவ்விடத்தின் துõரம் மற்றும் நீள, அகலங்கள் அளவீடு செய்யப்பட்டன. இரண்டவாது ரோப்கார் நவீன தொழில் நுட்பத்தில் ரூ.72 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது. ஒருபெட்டியில் 15 முதல் 20 பேர் வரை பயணிக்கும் வகையில் அமைக்கப்படும். இப்பணிகளை 18 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், முதல் ரோப்கார் அருகிலேயே 2வது ரோப்கார் அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக பொறியாளர்கள் குழுவினர் களஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் பிரான்ஸ் நிறுவனத்துடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து, இந்துசமய அறநிலையத்துறை ஒப்புதல்பெற்று, அடுத்தமாதம் பூமிபூஜையுடன் பணிகள் துவங்க உள்ளது என்றார்.