மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் 36 இடங்களில், டிஜிட்டல் ஆடியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்படுகின்றன.இக்கோயில் கோபுரங்களில் மட்டும் தற்போது குழாய் ஒலிபெருக்கி மூலம் திருமுறைகள், ஓதுவார் பாடல்கள் மற்றும் "ஓம் நமசிவாய மந்திரங்கள் ஒலிபரப்பப்படுகின்றன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, குழாய் ஸ்பீக்கர்கள் பயன்படுத்த தடை உள்ளதால், "பாக்ஸ் வடிவ டிஜிட்டல் ஆடியோ ஸ்பீக்கர்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.கோபுரங்கள், உள்பிரகாரங்கள், பொற்றாமரைக்குளம் உட்பட 36 இடங்களில் ரூ.17 லட்சம் செலவில் பொருத்தப்படுகிறது. இதற்கான செலவை சிட்டி யூனியன் வங்கி ஏற்றுள்ளது. 10 நாட்களில் இப்பணியை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் தெரிவித்தார்.