சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தில் தேர்திருவிழா நடந்தது காளசமுத்திரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 14 ம் தேதி துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அலங்காரம் செய்து, வீதியுலா நடந்தது. நேற்று மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.