திண்டிவனம்: திண்டிவனம் மருத்துவமனை சாலையிலுள்ள வேம்பரசு மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும், இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது.