காவேரிப்பபட்டணம்: காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெரு அங்காளம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நாளை (நவ., 25) நடக்கிறது. இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார்ம, பூஜைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. முன்னதாக இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அம்மன் பிரகார உற்சவம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். * தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் அமாவாசையை ஒட்டி நாளை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை 10 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மதியம் 1 மணிக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக இன்று இரவு 9 மணிக்கு ஜாமபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் தண்டபாணி, சக்திவேல் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.