கள்ளக்குறிச்சி: நீலமங்கலத்தில் துர்க்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆடி இரண்டாவது வெள்ளி கிழமையான நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலையில் சிவன், காமாட்சி தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெண்கள் குங்கும அர்ச்சனை செய்தனர்.