கெட்ட வழக்கங்கள் பலரையும் பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன. முன்பு குடிப்பது பெரிய பாவமாக கருதப்பட்டது. இப்போதோ பகிரங்கமாக பாட்டிலுடன் திரிகிறார்கள். சிலர் சுவைக்காகவும், சிலர் துன்பங்களைத் துடைக்கும் மருந்தாகவும் கருதி குடிப்பதாக சொல்கிறார்கள். குடிப்பது அவர்கள் வாழ்வை அழிக்கும் என்பது புரியவில்லை. காதல் என்ற போர்வையில் சிலர் சீரழிந்து பெற்றவர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
இவர்களுக்காக கர்த்தரிடம் ஆண்டவரே! இந்த சமுதாயம் கெட்டு சீரழிந்து கொண்டிருக்கிறது. மனிதர்களின் பாவத்தை துடைத்து அதை உம் தலையில் ஏற்றிக் கொண்டு சிலுவையில் மறைந்த நீர், எம் பாவங்களைத் துடைக்க வேண்டும். மீண்டும் ஒரு மலர்ச்சி சமுதாயம் அமைய வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். யோவான் என்ற ஞானி நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு, அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் என்கிறார். கெட்ட பழக்கம் உள்ளவர்கள் கடவுளிடம் தங்களை ஒப்படைத்தால் அந்த வழக்கங்களில் இருந்து மீளலாம் என்பது அவரது கருத்து.