அசுரர்களை வதம் செய்த ராமபிரான் அந்த பாவம் நீங்க வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். அவர் ராமா! 66 கோடி புண்ணிய தீர்த்தங்களும் கொண்ட புனித நதி காவிரி. கங்கை நதிக்கு இணையான இதை தட்சிணகங்கா என்று போற்றுவர். இதில் நீராடினால் பாவம் அனைத்தும் நீங்கும் என்றார். இதன் அடிப்படையில் ராமர் காவிரியில் நீராடியதாகவும் அந்த நாள் ஆடிப்பெருக்கு நன்னாள் என்றும் சொல்வர்.