வால்பாறை : வால்பாறை கக்கன்காலனி மதுரைவீரன் கோவில் கும்பாபிேஷகம் நிறைவடைந்து, 48 நாட்கள் மண்டல வழிபாடு நடந்தது. வால்பாறை கக்கன்காலனியில் எழுந்தருளியுள்ள மதுரைவீரன், முனீஸ்வரன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த மாதம், 9ம் தேதி மகாகும்பாபி ேஷகவிழா நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடந்தது. நிறைவு நாளில், மதுரைவீரனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.