தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் ஆடிப்பெருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2017 12:07
திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆக., 5 மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், ஆக.,7 காலை 9:00 மணிக்கு தேரோட்டம், ஆக.,9 மாலை 6:00 மணிக்கு தெப்ப உற்சவமும் நடக்கிறது.