பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
12:07
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோவிலில்ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.நேற்று காலை 7:45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆடித்திருவிழா தொடங்கியது. விழா நாள்களின்போது இரவு வீர அழகர் சாமி, கருடன்,ஹனுமான்,சேஷ,குதிரை,பறங்கி நாற்காலி,யானை, போன்ற வாகனங்களில் வீதியுலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் ஆக., 4ம் தேதியும்,தேரோட்டம் 7 ம் தேதியும், 8 ம்தேதி தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் முருகேசன்,அர்ச்சகர் கோபிமாதவன் செய்து வருகின்றனர்.