திம்மராஜம்பேட்டை : திம்மராஜம்பேட்டை கங்கையம்மன் கோவிலில், ஆடித் திருவிழா நேற்று முன் தினம் கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், கங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடி மாதந்தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன் தினம் காலை, 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், குடம் ஊர்வலம் நடந்தது. பகல், 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நடந்தது. இரவு, 8:30 மணிக்கு கங்கையம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்தார். திருவிழா ஏற்பாடுகளை, திம்மராஜம்பேட்டை கிராமவாசிகள் செய்திருந்தனர்.