விருத்தாசலம் முத்துமாரியம்மன் கோவிலில் 4ம் தேதி ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2017 06:08
விருத்தாசலம்: விருத்தாசலம், பெரியார் நகர் முத்துமாரியம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் வரும் 4ம் தேதி நடக்கிறது. விருத்தாசலம், பெரியார் நகர் முத்துமாரியம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 31ம் தேதி இரவு அம்மன் வீதியுலா நடந்தது. மாலை 5:00 மணியளவில் விளக்கு பூஜை நடந்தது. வரும் 4ம் தேதி காலை 7:00 மணியளவில் மணிமுக்தாற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தி, செடலணிந்து நேர்த்திக் கடன் செலுத்த உள்ளனர். மாலை 4:00 மணியளவில் சாகை வார்த்தல் மற்றும் 6:00 மணியளவில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 5ம் தேதி மஞ்சள் நீராட்டு, 6ம் தேதி கும்ப பூஜை நடக்கிறது.