பதிவு செய்த நாள்
02
ஆக
2017
11:08
தர்மபுரி: தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில், ஆடி மாத, மூன்றாம் செவ்வாய்கிழமையை முன்னிட்டு, சூலினி ராஜதுர்காம்பிகை அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தர்மபுரி, கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில், கடந்த 23ல், ஆடி அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு மஹா அபிஷேகம் நடந்தது. பின், பெண்களால் நடத்தப்படும், 18 படி பூஜை நடந்தது. ஆடி மாத, மூன்றாம் செவ்வாய் கிழமையான நேற்று காலை, பால்குட ஊர்வலம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, ராஜதுர்காம்பிகை உற்சவ அம்மனுக்கு பால், மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், இளநீர், தேன் உட்பட பல்வேறு அபி?ஷக, ஆராதனைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். மாலை, 5:00 மணிக்கு மேல், அம்மனுக்கு சூலினி ராஜ துர்காம்பிகை சுயரூபக்காட்சி அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.