Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறுபாக்கத்தில் மழை வேண்டி ஊரணி ... அம்மன் கோவில்களில் பொங்கல் வைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தரிசன நேரம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தரிசன நேரம் அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

03 ஆக
2017
12:08

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலின், துணை கோவில்களான, மகிஷாசுரமர்த்தினி அம்மன், சுந்தர விநாயகர் கோவில்களின் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. திருத்தணி முருகன் கோவிலின், துணை கோவில்களான, மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், திருத்தணி, ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் ஆகிய கோவில்கள், காலை, 6:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரையும், மாலை, 3:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த கோவில்களுக்கு, தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மூலவரை தரிசிக்க வருகின்றனர். இந்நிலையில், மதியம், 1:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை, இரண்டு மணி நேரம் கோவில் நடை சாத்தப்படுவதால், வெளியூர் பக்தர்கள், மூலவரை தரிசிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து, பக்தர்கள், காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை தொடர்ந்து, மூலவரை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். மதியம், இரண்டு மணி நேரம் கோவில் நடை சாத்தக் கூடாது என, கோவில் தக்கார், இணை ஆணையர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தும், மனுவும் கொடுத்தனர். பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, இந்து அறநிலையத் துறை ஆணையர் கவனத்திற்கு கொண்டு சென்று, கோவில் நடை தொடர்ந்து திறந்து வைப்பதற்கு அனுமதி பெற்றனர். இதனால், நேற்று முன்தினம் முதல், காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, இடைவெளி இல்லாமல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar