பதிவு செய்த நாள்
09
ஆக
2017
01:08
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள விநாயகர் கோவில்களில், வரும் 11ம் தேதி, மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சங்கட நிவாரண ஹோமம் நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், வரும் 11ம் தேதி, சங்கடஹர சதுர்த்தி, மகா சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. பஞ்சேஷ்டியை அடுத்த, நத்தம் கிராமம் (இ - கணபாக்கம்) ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவிலில், அன்றைய தினம், காரியசித்தி கணபதிக்கு, காலை, 10:00 மணி முதல், மதியம், 3:00 மணி வரை, சங்கட நிவாரண ஹோமம், 1,008 மூல மந்திர ஹோமம், ககார சகஸ்ரநாம அர்ச்சனை, விசேஷ அபிஷேகம், ஸ்தபன கலசாபிஷேகம், நடைபெறுகிறது. மதியம், 3:00 மணியளவில், மகா தீபாராதனை நடைபெறும். மேலும், திருவள்ளூர், தேவி மீனாட்சி நகர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் எதிரே அமைந்துள்ள காரியசித்தி கணபதி கோவில், பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள செல்வ விநாயகர், தீர்த்தீஸ்வரர் கோவில், ஜெயா நகர் விரிவாக்கம், வல்லப கணபதி கோவில் ஆகிய கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடக்கிறது. திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில், 11 விநாயகர்கள் கொண்ட விநாயகர் திருச்சபையில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.