பதிவு செய்த நாள்
09
ஆக
2017
01:08
செஞ்சி: செஞ்சி கோட்டை பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு, ஆடி பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி கிருஷ்ணகிரி மலையடிவாரம் உள்ள பூவாத்தம்மன், ராஜகிரி செல்லியம்மனுக்கு ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, பால் அபிஷேகம் நடந்தது.இதை முன்னிட்டு சுந்தரவிநாயகர், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை செய்தனர். மாலை 6:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.இதில் எம்.எல்.ஏ., மஸ்தான், நிர்வாக கமிட்டி தலைவர் ஆறுமுகம், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் செந்தாமரைகண்ணன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.